நான் சொல்வது சரிதானே!! ?

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

செல்போன் நம்பரை டிரேஸ் செய்ய

எப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்

கீழே லிங் உள்ளது
இதை கிலிக் செய்யவும்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

உங்கள் கணினியை கைப்பேசியால் ஷடவுன் செய்யுங்கள்

உங்கள் கணினியை கைப்பேசியால், திரையை பிரதி எடுக்கலாம், மறுதுடக்கம் செய்யலாம், ஷடவுன் செய்யலாம், வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம்,

தேவையானவை:
மடிக்கணினி அல்லது மேசைகணினி
ஆண்ட்ராய்ட் கைப்பேசி
ஒயர்லெஸ் ரூட்டர் (Wireless Fidelity)

கணினியயும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனைக்க வேண்டும்


முதலில் நீங்கள் இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும்
ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணினிக்கு

கைப்பேசிக்கான மென்பொருள்
கணினிக்கான மென்பொருள்

கணினி மென்பொருளை நிருவியதும், கணினி திரையில் இப்போது  ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும், சார்ட்கட் வராதவர்கள்,C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்க்கு சென்று அந்த ஐகாணை send to desktop கொடுங்கள்
பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுல் கிலிக் செய்க கீலே உள்ள பாப் அப் தோன்றும்
இப்போது உங்கள் கணினியில் ஒன் ஐடி தோன்றும் அதை பார்க்கலாம்


இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்லிகேசனை நிருவவும் , அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும், கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால் இயக்கலாம்

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

உங்கள் கோப்புறை வண்ணங்களை மாற்ற

முதலில் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்

இங்கெ சொடுக்குங்கள்


1, பிறகு இதை கணினியில்  நிறுவுங்கள்,

2, அதன் பிறகு உங்கள் கணினியில் வண்ணத்தை மாற்ற வேண்டிய கோப்புறையை தேர்வு செய்யவும்,

3,  அதை வலது பக்கமாக ( Right Click) சொடுக்குங்கள், அதில் கலரைஸ் என்ற விருப்பத்தை (Option)  தேர்வு செய்யவும்

4, அதில் உங்களுக்கு விருப்பமான வண்ணத்தை ( color) தேர்வு செய்யவும்

5, இப்போது உங்கள் மின்னஞ்சல் முகவரி கேக்கும், முகவரி கொடுத்ததும் விலையில்லா செயல்படுத்துதல் நடைமுறைபடுத்தும்,

6, உங்கள் கோப்பு இப்போது வண்ணமாக மாறியிருக்கும்

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

USB யினால் உங்கள் கணினியை பூட்டலாம் (LOCK)

நீங்கள் தனியாக பயன் படுத்தும் கணினியாக இருந்தாலும் சரி, இல்லை மடிக்கணினியாக இருந்தலும் சரி அதை வேறு யாரும் பயன் படுத்தாத வகையில் நாம் USB யை கொண்டு பூட்டலாம், USB இருந்தல் மட்டுமே கணினியை பயண்படுத்த முடியும், USB யை கணினியில் இருந்தி எடுத்துவிட்டால், கணினி திரை கருப்பாக மாறிவிடும், விசை பலகை வேலை செய்யாது, சுட்டியும் வேலை செய்யாது, திரும்பவும் நீங்கள் இதை பயன் படுத்தும் போது, USB யை செறுகிணால் போது கணினியை பயண்படுத்தலாம்

1, A, 32 பிட்டுக்கு இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள், 
  • Windows 8.1 (all editions) 64-bit
  • Windows 8 (all editions) 64-bit
  • Windows 7 (all editions) 64-bit
  • Windows Vista (all editions) 64-bit
  • Windows Server 2008 x64
  • Windows Server 2003 x64


    B, 64 பிட்டுக்கு இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்,

  • Windows 8.1 (all editions)
  • Windows 8 (all editions)
  • Windows 7 (all editions)
  • Windows Vista (all editions)
  • Windows Server 2008
  • Windows Server 2003
  • Windows XP SP3 (all editions)

2, இந்த மென்பொருளை நீங்கள் நிறுவியதும் தாணாகவே இயங்க     ஆரமித்துவிடும்,

3, இப்போது உங்கள் USB யை கணினியில் செறுகுங்கள், செறுகியவுடன் ஒரு செய்தி திரையில் காட்டப்படும், புதிய கடவு சொல்லை உள்ளிடுங்கள்,

4, இப்போது உங்கள் USB யின் DRIVE LETTERயை கேக்கும், உங்கள் டிரைவ் லெட்டர் எதுவென்று பார்த்து உள்ளிடவும்

5, கடைசியாக ஓக்கே பட்டனை கிளிக் செய்து மென்பொருளை ஆண் செய்து கொள்ளுங்கள்

புதன், 13 ஆகஸ்ட், 2014

இனையதள செய்திகளை PDF ஆக மாற்ற

உங்களுடய குரோம் ப்ரவ்சரை திறந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் உள்ள இனைய பக்கதினை இருந்த படியே பிரிண்ட் கொடுங்கள், டெஸ்டினேசன் சேன்ச் கொடுத்து அதில் சேவ் அஸ் PDF கொடுத்து பாதிவு செய்து கொள்ளவும்





வெள்ளி, 5 ஏப்ரல், 2013

எக்ஸ்பி ரிப்பேர் ஆப்சன் எதர்க்காக


பயாஸ் துவக்க வரிசையில் குறுவட்டு  துவக்க வரிசையில் அமைக்கவும்

* எக்ஸ்பி குறுவட்டுடை CD யில் போடவும்

* நீங்கள் பார்க்கும் போது "To setup Windows XP now, ENTER அழுத்தவும்",

* இப்போது நீங்கள் "ஆர்" அழுத்துவதன் மூலம் விண்டோஸ் சரிசெய்யும் விருப்பத்தை பார்ப்பீர்கள். இந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம் - அதை நீங்கள் செய்ய தேவை இல்லை அது மீட்பு பணியகம் செய்யத்தான் இதை தேர்ந்து எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, நிறுவல் தொடர தேர்வு செய்யவும்

* நீங்கள் உரிம ஒப்பந்தத்தை பார்க்கும் போது, F8 அலுத்தி ஒப்பு கொள்ள அழுத்தவும்

* அடுத்த திரையில் உங்கள் தற்போதைய எக்ஸ்பியை காட்டும் அதை தேர்வு செய்து எக்ஸ்பி சரிசெய்ய "ஆர்" அழுத்தவும்

இந்த இடத்தில் * காணமல் போன கோப்புகளையும் அல்லது பாதிக்கப்பட்ட கணினி கோப்புகளையும் சரி செய்து எக்ஸ்பி நிறுவ தொடங்கும். இது (புதிய) இயங்குத்தள நிறுவல் போன்ரே இருக்கும்.

செய்து பாருங்கள் சந்தேகம் ஏற்ப்பட்டால் பின்னூட்டம் இடுங்கள் இன்னும் விளக்கமாக பதிவு போடலாம்

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

RECYCLER வைரசை அழிக்க 2


வைரஸ்ஸை  அழிப்பதுபற்றி   நாம் ஏற்கனவே பதிவு  போட்டுள்ளோம்  அனால் அது சரியாக வேலை செய்யவில்லை என்று நண்பர்கள்  சொன்னதால் இந்த பதிவு இடுகிறோம்,
unlocker 1.87 என்ற  மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்  அதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு மை கம்பியூட்டர் செல்லவும் அதில் டூல்ஸ் > போல்டர் ஆப்சன்> வியூ> சென்று show hitten files, folders, and drivers டிக் செய்து ஒக்கே கொடுக்கவும் பிறகு RECYCLER & system volume information இந்த இரண்டு ஃபோல்டர்களில் ஒன்றை திரந்து உள்ளே உள்ள கோப்புகளில் ஒன்றை தேர்வு செய்து right click செய்யவும், இப்பொது அன்லாக்கர், டூலானது வரிசையில் தெரியும் அதை தேர்வு செய்யவும், அதில் move, delite, rename ஆப்சன்கள் கேக்கும் அதில் delite தேர்வு செய்யவும், இப்படி அதில் உள்ள அனைத்து கோப்புகளையும் அழித்த பிறகு RECYCLER & system volume information ஃபோல்டர்களையும் அழிக்கவும்

செவ்வாய், 24 ஜூலை, 2012

ரீசைக்ளர் வைரஸ்சை அழிக்க


நீங்கள் பென் டிரைவ் பயன் படுத்துபவராக இருந்தால் ரீசைக்ளர் வைரஸ் உங்கள் கணினியில் வர அதிக வாய்ப்புகள் உள்ளது, அல்லது நீங்கள் ஏற்கனவே அதனால் பதித்திருக்கலாம், நீங்கள் இந்த வைரசை அழிக்க ஆட்டோ ரன் ரிமுவர் மென்பொருள் கொண்டு அதை அழிக்கலாம்


இந்த மென்பொருளை இலவசமாக இங்கே தரவிறக்கம் செய்யலாம்

புதன், 1 பிப்ரவரி, 2012

இனையத்தில் கற்பனை உறுவம் வரைய


தமிழ் புழனாய்வு படங்களில் வருவது போல தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தீவிரவாதிகளின் முகத்தை கணினியில் உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள் அது போல நாமும் உருவாக்க ஒரு இனைத்தளம் ஒன்று நமக்கு உதவி செய்கிறது, இதில் தீவிரவாதிகள் முகம்தான் உறுவாக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை உங்கள் பக்கத்தில் உள்ள சில காமடி பீஸ்களின் முகமும் உறுவாக்கலாம், முயர்ச்சி செய்யுங்கள், 

சார்ட் கட் வைரஸிற்க்கு ஒரு தீர்வு

நாம் பயன் படுத்தும் பென் டிரைவ் மற்றும் மெமரி கார்ட் போன்ற வற்றில் சில நேரங்களில் போல்டர்கள் சார்ட் கட்டாக காட்சியளிக்கும் இது போன்ற நேரங்களில் அதை பார்மட் செய்து நாம் மறுபடியும் பயன்படுத்தலாம் ஆனால் உள்ளே உள்ள கோப்புகள் மிக முக்கிய மானதாய் இருந்தால் இலக்க நேரிடலாம் அதற்கு சரியான தீர்வு என்ன வென்றால் சார்ட் கட் வைரஸ் ரிமூவர் என்ற 507 கேபி அளவு உள்ள இந்த மென்பொருள் அதை முலுதுமாக நீக்கி பழய நிலைக்கே மீட்டுத்தருகிரது

வியாழன், 28 ஜூலை, 2011

பழுதான சிடி/டிவிடியிலிருந்து கோப்பை மீட்க

நாம் சிடி அல்லது டிவிடியில் நமது கோப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்க அதில் சேமிப்போம், ஆனால்  அதிலும் சில சிக்கல்கள் உள்ளது, சிடி / டிவிடியில் சிராய்ப்புகள் விழுந்தாலோ அல்லது கோடுகள் விழுந்தாலோ நம்மாள் கோப்புக்களை எடுக்க இயலாது , இது போன்ற நேரங்களில்  முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுக்க முடியும், அதர்க்கு மென்பொருள்கள் இலவசமாய் கீலே உள்ள தொடுப்பில் கிடைக்கின்றது அதில் ஒன்றை பதிவிறக்கம் செய்து பயண்படுத்திபாருங்கள்


சனி, 18 ஜூன், 2011

இனையத்தில் தினமும் 350 சம்பாதிக்கலாம் வாங்க

தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசாகொடுக்கிறார்கள்.  நாம் நம் தளத்தில் நிறைய விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக காத்திருப்போம் ஆனால் வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள் பூத்துவிடும்.  ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள். இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம். தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.  இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.  நன்றி...


சனி, 11 ஜூன், 2011

மைக்ரோசாஃப்ட்டின் கண்டுபிடிப்பில் தவறு

கணினி மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு இருப்பதை நாம் காணமுடியும் என்ற ஒரு mail எனக்கு வந்தது. அதில், ஸ்டார்ட் பட்டன் போய் ரன் கமாண்ட் போங்க calc பதிவு பன்னி எண்டர் கீயை அலுத்தவும்
2704 / 50 = 54.08 - இது சரியா வேலை செய்யுது
2704 / 51 = 53.01960784 - இதுவும் சரி
2704 / 52 = இது ஏன் வேலை செய்யல 
சரி நேரம் இருப்பவங்க பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் போடுங்க அப்படி இல்லையின்ன ஏன்னு நீங்க சொல்லுங்க

வெள்ளி, 10 ஜூன், 2011

ஐக்கான் அம்புக்குறியை மறைக்க

பல மென்பொருள்கள் நிறுவப்படும்போது அவைக்குரிய சார்ட்கட்கள் டெஸ்க்டாப்பில் சேர்க்கப்படுகின்றன. இந்த ஐக்கான் களை Shortcut Icon என அடையாள படுத்துவதற்க்காக இடது பக்க கீழ் மூலயில் ஓர் அம்புக்குறி இடப்படுகின்றன. Icon களில் உள்ள அம்புக்குறிகளை மாத்திரம் நீக்கும்போது திரை அழகாக தென்படும். விரும்பியவர்கள் நீக்கிக்கொள்ளலாம். ரெஜிஸ்ரியில் மாற்றம் செய்வதனூடாகவே இதை செய்ய முடியும்.

மாற்றம் செய்வதற்க்குமுன் Inkfile என்கிற Key யை export பண்ணி சேமித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்

Start -->Run--> Regedit> HKEY_CLASSES_ROOT என்பதன் இடது பக்கம் உள்ள + அடையாளத்தை கிளிக்பண்ணி விரிக்கவும்- கீழ்நோக்கி போய் LNKFILE என்னும் போடரை ஒருமுறை கிளிக்பண்ணவும் அடுத்து வலது பக்கம் IsShortcut என்று காணப்படும் Value ஐ கிளிக்பண்ணி அழித்து விடவும். கம்பியூட்டரை ரீஸ்டார்ட் பண்ணவும்.

அம்புக்குறி மறைந்திருப்பதை காணலாம்

ஞாயிறு, 15 மே, 2011

சிதைந்த விண்டோஸ்சை சீர் படுத்த

விண்டோஸ் இயக்க அமைப்பில் சில நேரங்கள் மெனுக்கள், டாஸ்க் மேனேஸர், கன்ரோல் பேனல், செக் பாக்ஸ்கள், பட்டன்கள் ஆகியவை கிளிக் செய்ய முடியாதபடி செயல்படாத நிலையில் (disabled) மறைந்து போயிருக்கும். அவற்றை கிளிக் செய்தாலும் எந்த வேலையு்ம் நடக்காது. இவற்றையெல்லாம் தெரியச் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவிதான் விண்டோஸ் எனேபிளர்.  இதை இயக்கிவிட்டு, disabled ஆக உள்ள பட்டன்கள், செக் பாக்ஸ்கள், மெனுக்களில் கிளிக் செய்தால் அவை இயங்கும். 

இதை நிறுவத்தேவை இல்லை அப்படியே இயக்கலாம்.

சனி, 14 மே, 2011

எப்போதும் கணினி வேகமாக இயங்க


பொதுவாக கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக கணணி இயங்கும்.
ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும். சிலரது கணினி பூட் ஆவதற்குள் மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும். சிலரது கணணி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும்.

இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கிய பொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது. WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன

.

மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை உணரலாம். இந்த மென்பொருளின் சோதனை பதிப்பு தான் இலவசமாக கிடைக்கிறது.

FULL VERSION தேவைப்படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக் கொள்வார்கள்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

எப்படி தடுப்பது நீக்குவது autorun.inf

உங்களுடய கணினியில் ஸ்டார்ட் சென்று ரன் கட்டளையை தேர்ந்தெடுக்கவும், அதில் CMD என் பதிவு செய்து உள்ளீடு செய்யவும்  del /a:rhs [driveletter]:autorun.inf என்று பதிவு செய்யவும். எந்த டிரைவில் autorun.inf உல்லதோ அந்த டிரைவ் பெயர் கொடுக்க வேண்டும்.



உதாரனத்திற்க்கு D: டிரைவில் உல்லதாக வைத்துக்கொள்வோம்
del /a:rhs D:autorun.inf என்று கொடுக்கவேண்டும்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மொபைல் சீக்ரெட் டிப்ஸ்



மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
  • போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
  • எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
  • மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
  • மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# இது எந்த போனுக்கும் பொருந்தும்.
  • போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
  • எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
  • எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
  • எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*
நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்
  • இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.
  • *#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
  • *#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
  • *#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
  • *#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
  • *#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
  • *#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
  • *#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய (சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி,ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)
சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்
  • சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.
  • *#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
  • #*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
  • #*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
  • #*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
  • #*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
  • *#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
  • *#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
  • *#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
  • *2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
  • *#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
  • *2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.


வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

டாஸ்க் மேனேஸர் சிக்கல் & தீர்வு

உங்கள் கணினியில் டாஸ்க் மேனேஸர் திரக்க படவில்லையா? கவலை வேண்டாம்


துவக்கு பட்டனை அலுத்தி ரன் கமாண்ட் தெர்வு செய்யவும்,


அதில் gpedit.msc என்று தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும்


இப்போது வரும் பெட்டியில் Administrative Templates தேர்வு செய்யவும், அதன் பிறகு அதர்க்கு உள்ளடுக்கில் system எனும் அடுக்கை தேர்வு செய்யவும், 


அதர்க்குள் இருக்கும் Ctrl+Alt+Delete options தேர்வு செய்யவும், அதன் பிறகு Remove Task Manager option யை இரட்டை கிளிக் செய்யவும் 


இந்த option யை டிசெபில் செய்யவும். 


அதோடு வெளிவரவேண்டியதான்.


இதை செய்ய சுலபமில்லை என நினைப்பவர்கள் கீலே உள்ள download யை அலுத்தவும்


ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மறைந்திருக்கும் கோப்பை தேட மென்பொருள்


இந்த மென்பொருளை நிருவ தேவை இல்லை, பதிவிறக்கி தொடந்தாளே போதும், இதில் நாம் எந்த நினைவகத்தில் தேட வேண்டும் என்று பதிவு செய்தால் போதும், அதில உள்ள அனைத்து மறைந்த கோப்புக்கள் அனைத்தும் பட்டியல் போட்டு காண்பிக்கின்றது, இதில் தேவை இல்லத கோப்புக்களை அழித்து விடவும் வழிகள் இருக்கின்றது,
                                                      
                                                                    
               ( பிறகு ஒரு முக்கியமான செய்தி இதை படித்து விட்டோ அல்லது பதிவிறக்கம் செய்து விட்டோ ஒட்டோ அல்லது கருத்துரையோ போடாமல் போபவர்களுக்கு, அவர்கள் கணினி வேலை செய்யாமல் போக கடவது என்று சாபமிடுகிரேன் )