நான் சொல்வது சரிதானே!! ?

ஞாயிறு, 7 நவம்பர், 2010

விண் XP கீ எளிதாக பெறுங்கள் !விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும்.

இந்த தொல்லையிலிருந்து எப்படி மீள்வது? ஒரிஜினல் சிடியோ அல்லது ஒரிஜினல் போல காப்பி எடுத்த, நிறுவனங்கள் வழங்கிய சிடியோ இருக்கும் வரை, இந்த ப்ராடக்ட் கீயை அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.


1. சிஸ்டம் சிடியை அதன் டிரைவில் செலுத்தவும்.

2. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் சிடியின் டைரக்டரிகளுக்குள் நுழையவும். அதில் கிடைக்கும் போல்டர்களில் i386 folder என்ற போல்டரைத் திறக்கவும்.

3. அங்கு unattend.txt என்ற பைலைத் திறந்து அதன் இறுதி வரை செல்லவும்.

4. இறுதியில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ இருக்கும்.

வியாழன், 4 நவம்பர், 2010

இண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்!


 இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை ,  இலவசமாக இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து  தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்
 பிறகு டெஸ்க்டாப்பில்  இதன் ஐகானை கிளிக் செய்து திரதுகொள்ளுங்கள் அதில் start page URL என்பதுக்கு கீழ் தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் உங்களுக்குதேவையானத்தை மற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானலு இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் நபக்கு பிடித்த இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணைய இனைப்பு தேவை என்பதை மறந்து விடாதிர்கள் ?

புதன், 3 நவம்பர், 2010

கணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க

சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முறையாக அதை செய்யவேண்டும். ‎அதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.

முதலில் Start கிளிக் செய்து வரும் Programs- ல் சாப்ட்வேரை ‎தேர்ந்தேடுங்கள்.‎ அந்த ப்ரோகிராமுடன் Uninstall என்கின்ற Utility கொடுத்திருப்பார்கள். ‎அதை பயன்படுத்தி சாப்ட்வேரை நீக்கலாம்.

இரண்டாவது, Start, Settings, Control Pannel, Add/Remove Programs கிளிக் செய்து வரும் ‎விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை தேர்வு செய்து Uninstall கிளிக் ‎செய்யவும்.

மூன்றாவது, Start, Run சென்று பின்பு ‎regedit.exe-ஐ Type செய்யவும்.‎ வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE கிளிக் செய்யவும்.‎ அதில் உள்ள Software கிளிக் செய்யவும். பின் வரும் விண்டோவில் ‎Microsoft கிளிக் செய்யுங்கள்.‎ அதில் உள்ள + Symbol- ஐ நீங்கள் கிளிக் செய்ய வரும் விண்டோவில் முறையே Curent Version மற்றும் Uninstall ‎தேர்ந்தடுங்கள்.‎ 

இதில் Uninstall கிளிக் செய்ய கணிணியில் உள்ள Software List அனைத்தும் வரும்.‎ இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து Delete ‎செய்யுங்கள்.