நான் சொல்வது சரிதானே!! ?

சனி, 21 ஆகஸ்ட், 2010

விண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா? இனி கவலை இல்லை

அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் வழங்கியிருப்பர் பலர். அவ்வாறு வழங்கிய பாஸ்வர்டை மறந்து விட்டு கணினியை உபயோக்க்க முடியாமல் தவிப்பார்கள் இன்னும் பலர். இந்தப் “பலர்”களுக்கு உபயோகமன ஒரு விண்டோஸ் டிப்ஸ்

விண்டோஸின் முன்னைய பதிப்புகள் போலன்றி எக்ஸ்பீ பதிப்பில் கட்டாயம் ஒரு பயனர் கணக்கை (User Account) உருவாக்கிய பிறகே கணினியை உபயோகிக்க வேண்டியுள் ளது. ஒன்றுக்கு மேல் பயனர் கணக்கை வைத்திருக்கும் போது ஒவ்வொருவரும் இந்தப் பயனர் கணக்கு மூலம் வெவ்வேறு செட்டிங்ஸ்ஸை கணினியில் பேணக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்த பயனர் கணக்கிலும், கணினியின் ஏக போக நிர்வாகி (Administrator) வரையறுக்கப்பட்ட பயனர் (limited user) என இரு வகைகளுண்டு. அட்மினிஸ்ட்ரேட்டர் என்பவருக்கு கணினியில் விரும்பிய மாற்றங்களைச் செய்ய முடியும். வரையறுக் கப்பட்ட பயனருக்கு எல்லா செட்டிங்ஸையும் மாற்ற உரிமையில்லை. அத்துடன் ஒவ்வொரு பயனரும் தங்கள் கணகிற்கு ஒரு பாஸ்வேர்டும் அளித்து தங்கள் செட்டிங் குகளை எவரும் மாற்றாத வண்ணம் பாதுகாப்பளிக்கவும் முடியும். இது தவிர விண்டோஸ் Administrator எனும் பெயரி லும் ஒரு யூசர் கணக்கு இயல்பாகவே உருவாக்கப்படும்.

ஆனால் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் இல்லாமலேயே அடுத்தவர்கள் உங்கள் கணினியைப் பயன் படுத்த முடியும். அது எப்படி சாத்தியம். அதாவது மேலே குறிப்பிட்ட  அட்மினிஸ்ட்ரேட்டராக கணினிக்கு உள்ளே நுளைய முடியும்.

கணியையை இயக்கியதும் வரும் விண்டோஸ் வெல்கம் திரையில் விசைப்பலகையிலுள்ள Ctrl + Alt + Del ஆகிய விசைகள் மூன்றையும் இரண்டு தடவை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது வேறொரு log on திரை தோன்றும். அங்கு யூசர் பெயராக Administrator என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அவ்வளவுதான்! அடுத்த சில வினாடிகளில் நீங்கள் உள்ளே நுளைந்து விடலாம். இனியென்ன பாஸ்வர்ட் பாதுகப்பளித்த யார் கணினியையும் துலாவலாம்