நான் சொல்வது சரிதானே!! ?

வெள்ளி, 28 மே, 2010

கைப்பேசியில் திருட்டு

தேவையற்ற நேரத்தில் உங்கள் கைப்பேசியில் ப்லுடூத் ஐ நிறுத்தி வையுங்கள். நீங்கள் உங்கள் கைப்பேசியில் இந்த மென்பொருளை பதிவிறக்கி மெமரி கார்ட் மூலம் உங்கள் கைப்பேசிக்கு கொண்டுவந்து, அதை கைப்பேசியில் மெமரி கார்டில் எந்த பகுதியில் பதிந்தோமோ அந்த இடத்திற்க்கு சென்று இயக்குங்கள் கீழே உள்ள படம் போன்று மென்பொறுள் திறக்கும்
அதில் ப்லுடூத் ஆன் செய்து செர்ச் செய்தீர்கள் ஆனால், பக்கத்தில் உள்ள எந்த கைப்பேசியில் ப்லுடூத் ஆன்ஆகியிருந்தாலும் அதை காட்டும், இப்போது நீங்கள் எளிதாக அந்த கைப்பேசியில் உள்ள எஸ் எம் எஸ், போன்புக்கில் உள்ள அனைத்து எண்களையும், மற்றும் ஸ்டில்ஸ், கால் லாக் ஆகியவைகளை நீங்கள் எளிதாக அவர்களுக்கு தெரியாமல் அதனை எடுத்து விடலாம்


வினாடியில் கணினியை அணைக்க


பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.

டேட்டா ரெகவரி
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

திங்கள், 17 மே, 2010

வேகமான வளைஉலாவி ஒபெரா


விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஒபெரா பிரவுசர் பதிப்பு 10.53. ஒபெரா என்ற ஒபெராவின் தளத்தில் இதனை பதிவிறக்கம் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும். இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஒபெரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம். புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

அரட்டைகளில் Invisible லாக கண்டுபிடிக்கலாம்


சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும் நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.

முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.

அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.

இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

ஞாயிறு, 9 மே, 2010

யூஎஸ்பியில் மால்வேர்களை தடுக்க


நினைவக பிளாஸ் கருவிகளில் Autorun.inf என்னும் ஒரு கோப்பின் மூலம் பல்வேறு தீச்செயல்கள் பரவுகின்றன. இந்த Autorun.inf என்பது தன்னிச்சையாக சில செயல்களை USB கருவியில் இருந்து பிற கணினிக்கு பரப்பிவிடும். இதனால் பல தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்கு AutorunEater என்கிற மென்பொருளை ஐ பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் கணினியில் பின்புலத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். எப்போதாவது தீங்கு விளைவிக்ககூடிய USB கருவியின் Autorun.inf கோப்பை இது கண்டால் உடனே அதைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை தரும்.....

வெள்ளி, 7 மே, 2010

விண்டோஸ் எக்ஸ்பி ரெக்கவரி


உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி திடீர் என்று ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என்ற பிரச்சனையும் , மற்றும் ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் உங்கள் கணினியில் வந்தால் நீங்கள் செய்யவேண்டியது விண்டோஸ் ரெக்கவரி கன்சோல். தகறாறு செய்யும் எக்ஸ்பியை சரிசெய்ய பார்மட் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் . இதற்க்கு விண்டோஸ் எக்ஸ்பி சிடி தேவை ,சிடியை டிரைவ்வில் போட்டு ஸ்டார்ட் சென்று ரன் கமன்ல் தேர்ந்தெடுங்கள், ரன் டயலாக் பாக்ஸில் [ CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons ]என்று டைப்புங்கள் கவனிக்க : இங்கே CD-ROM drive letterஎன்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும், இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்” கொடுங்கள்,இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும்,உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .

.

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..

1.பிழைச்செய்தி:No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.
1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:
1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..
1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.

புதன், 5 மே, 2010

தமிழில் எழுதியதை படிக்கும் செயலி


இந்த தொடர்பை பயன்படுத்தி உரைவாசிக்கும் செயலிக்கு செல்லுங்கள்,


அங்கு தமிழில் தட்டச்சு செய்தோ அல்லது ஒரு உரையை நகலெடுத்து ஒட்டிய (copy, paste) பிறகு கீழே உள்ள சமர்பி (submit) என்ற கட்டளையைம் சொடுக்குங்கள், உடனே மற்றொறு சன்னல் திறக்கும் அதில் சொடுக்கு (click here) என்ற இடத்தில் சொடுக்குங்கள், நீங்கள் உள்ளிட்ட உரை ஒலிப்பதிவாக தரவிறக்கம் ஆகும்.

இது ஒரு அருமையான செயலியாகும், இனி உங்கள் விருப்பபடி உரைகளை ஒலிவடிவில் கேட்கலாம், பதிவு செய்து பாதுகக்கலம்,

எளிய தமிழில் போட்டோசாப்


நிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை. இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ளலாம்.கணினியில் இருந்து பீப் ஒலி


கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சிலபாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்கதொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

செவ்வாய், 4 மே, 2010கம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் செயல்படுகையில் நாம் மேற்கொண்டு முடித்த செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள Undo என்னும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது எதனையாவது அழித்துவிட்டால், மீண்டும் அதனைக் கொண்டு வரலாம். அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்களை இந்த வசதி மூலம் ஒவ்வொரு மாற்றமாக மீண்டும் கொண்டு வரலாம். பிரவுசரிலும் அண்மைக் காலத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் மூடிய டேப்பினை மீண்டும் திறக்கலாம். இதற்கு கண்ட்ரோல்+ ஷிப்ட்+டி (Ctrl+Shft+T) அழுத்த வேண்டும். அதே போல மூடிய விண்டோவையும் கொண்டு வரலாம். அதற்கு அழுத்த வேண்டிய கீகள் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl+Shft+N)

திங்கள், 3 மே, 2010

சோசியம் பார்க்க ஒரு மென்பொருள்


மனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோசியம் பார்க்க மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர், உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கவிருக்கும் நல்லது கெட்டது அனைத்தயும் கனித்து சரியாக சொல்ல இந்த மென்பொருள் பயன்படும் என்று சொல்லப்படுகிறது, ஆனால் இதை பயன் படுத்துபவர்கள் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்தால் உங்களுக்கே புரியும், இது உன்மை இல்லை என்று
இந்த மென்பொருள் இந்த இனைப்பில் கிடைக்கும்

இலவசமாக பேசலாம் வாங்க !

இந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அதிக நேரம் பேச முடியாது,ஏதேனும் அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 2 அழைப்புகள்தான் பேச முடியும், முயன்று பாருங்கள்

இனையத்தில் இலவசமாக குறும்செய்தி (SMS) அனுப்ப

160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தள‌த்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா?

இந்தியா முழுவதும் உள்ள செல்போன் என்களுக்கு எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப முடிவதோடு குவைத். மலேஷியா, சிங்கப்பூர்,சவுதி,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி உண்டு.

நாம் அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகள் நம்முடைய செல்போன் எண்ணிலிருந்து அனுப்பபட்டது போலவே தோன்றும்.

இந்த சேவை முற்றிலு இலவசம் என்றாலும் ஒரு நிபந்தனை உண்டு.வழக்கமாக எஸ் எம் எஸ் அனுப்பும் போது 160 எழுத்துக்களை பயன்படுத்தலாம். இங்கே அதில் பாதி தான் அனுமதி. அதாவது 80 எழுத்துக்க‌ள் மட்டும் தான்.மீதி 80 எழுத்துக்க‌ள் விள்ம்ப‌ர‌த்துக்கு போய்விடும்.

இப்ப‌டி நாளொன்றுக்கு 50 செய்திக‌ள் வ‌ரை அனுப்பி வைக்க‌லாம்.

இதில் ப‌திவு செய்து கொண்டால் நாமும் வ‌ரி விள‌ம்ப‌ர‌ங்க‌ளை ச‌ம‌பிக்க‌லாம். அவை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனுப்பும் செய்தியோடு சேர்த்து அனுப்பி வைக்க‌ப்ப‌டும்.

மற்றும் பல இனயதளம் இனைப்பு கீலே

வெ டு எஸ் எம் எஸ்

யூ மைண்ட்

ஆரோசாட்ரோ

இன்னும் பல இருக்கிரது வேண்டுமென்றால் கீலே பதிவு எழுதுங்கள்

ஞாயிறு, 2 மே, 2010

இனையத்தில் இலவசமாக பேச எந்த நாட்டுக்கும்

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது. இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அப்ளிகேஷன் புரோகிராமின் புதிய பதிப்பு ஸ்கைப் 4.2.0.152 அண்மையில் பிப்ரவரி 25ல் வெளியானது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் பைலின் அளவு 1.6 எம்பி தான்.

இதனைப் பெற ஸ்கைப் தளம் சென்று அங்குள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். இதற்கான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். இதனை இறக்கிய பின், அதற்கான இன்ஸ்டலேஷன் பைலில், டபுள் கிளிக் செய்திடவும். தானாகப் பதியப்படும்.

இந்த புதிய பதிப்பு, ஸ்கைப்பைப் பயன்படுத்த தெளிவான யூசர் இன்டர்பேஸ் தருகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதிதாக ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். பிற பயனாளர்களை விரைவாகத் தேடி தொடர்பு கொள்ள முடிகிறது.


இதில் பல பைல்களை ட்ரான்ஸ்பர் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பேச்சொலி மிகத் தெளிவாக உள்ளது. சேட் வசதி, ஒரே நேரத்தில் ஐந்து பேர் கலந்துரையாடும் கான்பரன்ஸ் வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படுள்ளன. இதனை விண்டோஸ் 2000 சிஸ்டம் முதல் இன்றைய சிஸ்டம் வரை உள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். வீடியோ அழைப்புகளைப் பெற எக்ஸ்பி தேவை. பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இருந்தால், தொடர்பு மிகச் சிறப்பாக இருக்கும்.

இணைந்தோ அல்லது தனியாக இணைத்தோ மைக், ஸ்பீக்கர்கள் கட்டாயம் தேவை. வீடியோ அழைப்புகளுக்கு வெப் கேமரா தேவை. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ப்ராசசர் குறைந்தது 400 MHz வேகம் உடையதாக இருக்க வேண்டும். ராம் மெமரி குறைந்தது 128 எம்பி தேவை. ஹார்ட் டிரைவில் 15 எம்பி இடமாவது காலியாக இருக்க வேண்டும்

உங்கள் ANTIVIRUS வேலை செய்யுதா நீங்களே சோதனைசெய்யுங்கள்

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(
நீல
நிறம் )
ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் . உடனே அதை ரிமூவ் செய்துவிட்டு புதிய
அவாஸ்ட் பதிவிறக்கி கொள்ளவும்

உங்கள் கணினி மெதுவாக துவங்குகிரதா ?

விண்டோஸ் இயக்கம் தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.

எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

1.ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும்.

2.இந்த விண்டோவில் “msconfig” என டைப் செய்திடவும்.

3.கிடைக்கும் விண்டோவில் General” என்ற டேபில் கிளிக் செய்திடவும்.

4.இதில் “Selective Startup” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

5.இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

6.முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும்.

7.பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும்.

வரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும்.

இனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.

கணினியில் ட்ரைவ்வை மறைப்பது எப்படி?


முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்