நான் சொல்வது சரிதானே!! ?

செவ்வாய், 4 மே, 2010கம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் செயல்படுகையில் நாம் மேற்கொண்டு முடித்த செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள Undo என்னும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது எதனையாவது அழித்துவிட்டால், மீண்டும் அதனைக் கொண்டு வரலாம். அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்களை இந்த வசதி மூலம் ஒவ்வொரு மாற்றமாக மீண்டும் கொண்டு வரலாம். பிரவுசரிலும் அண்மைக் காலத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் மூடிய டேப்பினை மீண்டும் திறக்கலாம். இதற்கு கண்ட்ரோல்+ ஷிப்ட்+டி (Ctrl+Shft+T) அழுத்த வேண்டும். அதே போல மூடிய விண்டோவையும் கொண்டு வரலாம். அதற்கு அழுத்த வேண்டிய கீகள் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl+Shft+N)