நான் சொல்வது சரிதானே!! ?

வெள்ளி, 7 மே, 2010

விண்டோஸ் எக்ஸ்பி ரெக்கவரி


உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி திடீர் என்று ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என்ற பிரச்சனையும் , மற்றும் ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் உங்கள் கணினியில் வந்தால் நீங்கள் செய்யவேண்டியது விண்டோஸ் ரெக்கவரி கன்சோல். தகறாறு செய்யும் எக்ஸ்பியை சரிசெய்ய பார்மட் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் . இதற்க்கு விண்டோஸ் எக்ஸ்பி சிடி தேவை ,சிடியை டிரைவ்வில் போட்டு ஸ்டார்ட் சென்று ரன் கமன்ல் தேர்ந்தெடுங்கள், ரன் டயலாக் பாக்ஸில் [ CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons ]என்று டைப்புங்கள் கவனிக்க : இங்கே CD-ROM drive letterஎன்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும், இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்” கொடுங்கள்,இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும்,உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .

.