குறு நினைவகத்தில் Write Protected பிழையை நீக்க...
சில நேரம் குறு நினைவகத்தில் (பென் டிரைவ்) எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
எளிமையான வழி:
Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0
பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம்.
சரி
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.
reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1
சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்
வணக்கம் நண்பரே
பதிலளிநீக்குதங்கள் பதிவினை பார்த்தேன்.
மிகவும் பலனுள்ள பதிவு.
தங்களிடம் ஒரு உதவி.
என்னுடைய பெண் டிரைவ் -128 gb சீனா விலிருந்து ஆன்லைன் மூலமாக வாங்கப்பட்டது.
அது FAT32 ஆக போர்மட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அது வேலை செய்வதில்லை.
கோப்பி செய்து வேறு ஒரு சிஸ்டத்தில் பார்த்தால் அது ஓபன் ஆவதில்லை.
NTFS ஆக போர்மட் செய்ய முயற்சித்தேன் . முடியவில்லை.
Ubunduvil ஏதேனும் வழி உள்ளதா ?
நன்றி
ஆனந்த்
dnithyanandan@gmail.com
உங்களது மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியுள்ளேன் ஆனந்த், நன்றி
பதிலளிநீக்குதொடர்ந்து ஆதரவு தாருங்கள்