நான் சொல்வது சரிதானே!! ?

திங்கள், 12 ஜூலை, 2010

பாதுகாப்பிற்க்கு Deep Freeze மென்பொருள்.


என்னதான் நல்ல ஆண்டிவைரஸ் உபயோகித்தாலும், சில சமயம் அவை வைரஸ்களை கட்டுபடுத்துவது இல்லை. இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த வைரஸ்கள் முக்கியமான புரோகிராம் கோப்புக்களை காலி பண்ணிவிட்டால், அவ்வளவுதான் மீண்டும் OS-யை Install செய்தால்தான் முடியும்.
இது போண்ற பல பிரச்சனைகளிலிருந்து சிஸ்டத்தை காப்பாற்ற இப்போதெல்லாம் Deep Freeze என்ற மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருளை நிறுவி விட்டால், உங்கள் சிஸ்டத்தை வைரஸ் தாக்காது. தாக்கவும் முடியாது. Computer Lock என்று விவேக் சொல்லுவது போல உங்கள் கணினியை இந்த மென்பொருள் மூலம் பூட்டியாகிவிட்டது.
வைரஸ்கள் இணையம் மூலமாகவும், பென் டிரைவ், டிஸ்க் மூலமாகவும் வந்து கணினியை தாக்குகின்றன. வைரஸ் உள்ள பென் டிரைவ் மூலம் உங்கள் சிஸ்டத்துக்கு வைரஸ் வந்துவிட்டாலும், நீங்கள் சிஸ்டத்தை Restart செய்யும் போது அந்த வைரஸ் அழிந்துவிடும். மேலும் நீங்கள் தெரியாமல் Delete பண்ண கோப்புகள் கூட Restart செய்தால் அப்படியே இருக்கும். சுருக்கமாக சொன்னால் ”சி” டிரைவ் (அ) நீங்கள் OS Install பண்ணியுள்ள டிரைவ் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும். சிஸ்டத்தின் Administrative மட்டுமே இதை மாத்த இயலும்.
இணையதளத்தில் உலவும் அனைவருக்கும் இந்த மென்பொருள் முக்கியமானது. ஏனெனில் இணையத்தில் இருந்துதான் 90% வைரஸ்கள் சிஸ்டத்தை தாக்குகின்றன…