நான் சொல்வது சரிதானே!! ?

திங்கள், 27 செப்டம்பர், 2010

இணைய பயணளர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்


உங்களது புகார் உள்ளூர், மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு மிக்க இன்றியமையாத ஒன்றாகும். இவர்கள் நுகர்வோரின் புகார்களை ஆய்ந்து குற்றத்தின் மூலத்தை கண்டுபிடித்து, ஹேக்கர்கள், அடையாள திருடர்கள் மற்றும் தொல்லை அஞ்சல் அனுப்புவோருக்கு எதிராக வழக்கு பதிய முடியும். ஊடகங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைய உபயோகிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவது மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது போன்ற பணிகளுக்கு இந்த தகவல்களை பயன்படுத்துகின்றன.

இந்தியாவின் இணைய குற்ற தடுப்பு பிரிவுகள்

மத்திய புலனாய்வுத் துறையின் இணைய குற்ற விசாரணை பிரிவு மார்ச் 3, 2000ல் இருந்து செயல்பட்டு வருகிறது. காவல்துறை கண்காணிப்பாளர் இந்த பிரிவுக்கு தலைவராக இருக்கிறார். தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன் பிரிவு XI-ன் படி தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் தவிர தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பிற குற்றங்களையும் விசாரிக்கும் அதிகாரம் இந்த பிரிவுக்கு உண்டு. இங்கே கிளிக் செய்து இந்தியாவில் உள்ள இணைய குற்ற விசாரணைப் பிரிவுகளின் விவரங்கள் மற்றும் பிற காவல்துறை இணையத்தளங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் எப்போது இணைய குற்ற தடுப்பு பிரிவிற்கு புகார் செய்ய வேண்டும்?

வைரஸால் பாதிப்பு, ஹேக்கரால் தாக்குதல்

உங்களது கணினி ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளானாலோ அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டாலோ, இணையத்தில் இருந்து முதலில் விடுவித்துவிட்டு, அதனை சமீபத்தில் மேம்படுத்தல் செய்யப்பட்ட ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருள் கொண்டு முழுக்க ஸ்கேன் செய்யுங்கள். பிறகு, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனம் (ஐஎஸ்பி) மற்றும் உங்களால் கண்டறிய முடிந்தால் ஹேக்கரின் ஐஎஸ்பி இரண்டையும் தெரிவியுங்கள். இறுதியாக, புகாரை பதிவு செய்ய வேண்டியது இணைய குற்ற தடுப்பு பிரிவில்.

வேவு மென்பொருள்

உங்களது கணினியில் வேவு மென்பொருள் இருப்பதாக நீங்கள் கருதினால், அதனை இணைய குற்ற தடுப்பு பிரிவில் புகார் செய்யுங்கள்

இணையத்தள மாறாட்ட மோசடி

உங்களது நிறுவனம் அல்லது வங்கியின் பெயர் அல்லது விவரங்களை கோரி போலியான தளங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களை சேமித்து வையுங்கள். இந்த மின்னஞ்சலை உள்ளூர் இணைய குற்ற தடுப்பு பிரிவிற்கு அனுப்புங்கள்.

தொல்லை மின்னஞ்சல்கள்

உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சல் மோசடியானது என்று உங்களுக்கு தெரிந்தால், அதனை இணைய குற்ற தடுப்பு பிரிவிற்கும் மற்றும் அனுப்பியவரின் இணைய சேவை நிறுவன துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கும் அனுப்புங்கள். மேலும், இந்த மின்னஞ்சல் ஒரு வங்கி அல்லது முக்கிய நிறுவனங்களை போன்றதொரு போலியாக தயாரிக்கப்பட்டிருந்தால் உண்மையான வங்கி அல்லது நிறுவனத்திற்கும் அந்த மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள்.

அடையாளத் திருட்டு

உங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தபட்டிருந்தால், உங்களது அடையாளம் திருடப்பட்டது குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம்.

இணைய வியாபார மோசடி

ஒரு வியாபார பரிவர்த்தனையின் போது நீங்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அதனை விற்பவர், வாங்குபவர் அல்லது அந்த இணையத்தளம் நடத்துபவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தீர்வு காண முயற்சியுங்கள். அந்த முயற்சி பலனளிக்காத பட்சத்தில், உங்களது மாநிலத்தில் உள்ள இணைய குற்ற தடுப்பு பிரிவில் புகார் செய்யுங்கள்.

சேவை நிறுவனங்கள்

ஐடிஏ-2000 அல்லது பிற சட்டங்களின் படி, யாஹு, ஹாட்மெயில் போன்ற சேவை நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் இந்தியாவில் செய்யப்படும் அந்த சேவைகள் தொடர்பான புகார்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இங்கே கிளிக் செய்து சேவை நிறுவனங்கள் குறித்த தகவல்களை பெறவும்
நன்றி: http://www.cert.org.in/

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

சுட்டி (mouse) இயங்க மறுக்கும் போது

உங்கள் மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், அல்லது பட்டன்கள் கிளிக் செய்தாலும் எந்த வித செயலும் இன்றி சும்மா இருக்கலாம். இதனால் நாம் மவுஸை எடுத்து மீண்டும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்ப்போம். புதிய யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து வேலை செய்கிறதா எனச் சோதனை செய்திடுவோம். அல்லது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுவோம். 



அப்படியும் மவுஸ் எனக்கென்ன என்று இருந்தால் நம் பொறுமை எல்லை மீறிப்போய் மவுஸை தூக்கி எறியும் அளவிற்குச் சென்று விடும். ஆனால் கம்ப்யூட்டரை இயக்க வேண்டுமே. என்னதான் தீர்வு? என எண்ணுகிறீர்களா? இதோ விண்டோஸ் அதற்கான வழிகளைத் தந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நம்லாக் கீ பேட் உங்களுக்கு மவுஸாக துணை புரியும் வகையில் செட் செய்திடலாம். அந்த வழிகளைப் பார்ப்போமா! 


முதலில் ஆல்ட்+ஷிப்ட்+நம்லாக் கீகளை (Alt+Shift+NumLock) அழுத்துங்கள். ஒரு சிறிய மவுஸ் கீ விண்டோ கிடைக்கும். மவுஸ் கீகளை இயக்க நிலையில் வைக்க விரும்பினால் ஓகே கிளிக் செய்திடுங்கள். 



மவுஸ் கர்சர் குறித்த டீடெய்ல்ஸ் தகவல்களைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் Settings பட்டனில் கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கர்சர் ஸ்பீட் மற்றும் பலவற்றை இதில் செட் செய்திடலாம். செட் செய்து முடித்தவுடன் கீழ்க்காணும் வகையில் உங்கள் நம்லாக் பேட் மவுஸாகச் செயல்படும்; அல்லது நீங்கள் செயல்படுத்தலாம். 



1,2,3,4,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சர் செல்லும் திசையை நிர்ணயிக்கும். 

 5 ஆம் எண்ணுக்கான கீ மவுஸ் கிளிக் பட்டனாகச் செயல்படும். 


 இன்ஸெர்ட் கீ மவுஸ் கிளிக் பட்டனாக இயங்கும். 


 + கீ ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திட பயன்படும். 


 டெலீட் பட்டன் மவுஸை ரிலீஸ் செய்திட பயன்படும். 


நம்பர் கீ பேட் மவுஸுக்குப் பதிலாக இயங்குவதை நிறுத்த நம்லாக் பட்டனைத் தட்டவும். 

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இப்படியும் இனய இனைப்புகள்


"டிக்ஸ்பி" மென்பொருள்


அரட்டைகள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.இப்போ இவை அனைத்தும் ஓரிடம்.அதுதான் "டிக்ஸ்பி" மென்பொருள்.


இப்போ yahoo,gtalk,MSN போன்ற எல்லா அக்கவுண்ட்களையும் "டிக்ஸ்பி" என்ற ஒரே மென்பொருள் கீழே பயன்படுத்தி அரட்டை அடிக்கலாம்.







shortcut keys:நிரல்களை வேகமாக இயக்குவதற்க்கு நாம் குறுக்கு தட்டச்சு விசையை பயன்படுத்துவோம்.எ.கா. டாக்குமெண்டில் உள்ள எழுத்துக்களை நகள் எடுக்க cntrl+C கீயை அழுத்துவோம்.அதேப்போல் பல நிரல்களுக்கு பயன்படுத்தக்கூடிய குறுக்கு விசை கீகளைப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.







மென்நூல்களை தேட இந்த இணைய இணைப்பை அனுகவும்.இது தமிழையும் ஆதரிக்கிறது...


தமிழ் மென்நூல்களை தேட தமிழிலே தட்டச்சு செய்து தேடலாம்.